ஞானசார தேரரின் கதையை கேட்டவர்களுக்கு நடந்தது என்ன?

(UTVNEWS | COLOMBO) -கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை உரிய முறையில் அனைத்து அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக தரம் உயர்த்தி தர கோரி ஐவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

போராட்டத்தின் ஆறாவது நாள் களத்திற்கு விரைந்த கலகொட அத்தே ஞானசார தேரர் 30 நாட்களுக்குள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை சகல வித அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக மாற்றித் தருவேன் இல்லையேல் 31ஆம் நாள் எனது தலைமையில் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்றுடன் 31ஆவது நாள் கடந்துள்ளது.பிரதமரின் உத்தியோகபூர்வமான அறிக்கையை வாசித்த சுமந்திரன், அமைச்சர்கள் உட்பட கல்முனை தமிழர்கள், சிங்களப் பேரினவாத சக்தியின் ஒட்டு மொத்த உருவமாக இருக்கும் ஞானசாரரின் வெறும் வாய்வார்த்தையை மாத்திரம் வைத்து போராட்டத்தை கைவிட்டார்கள்.

விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய ஒரே ஒரு விடயம், தமிழர்களின்பிரச்சினை சார்ந்து சிங்கள பேரினவாதிகளோ, சிங்கள சக்திகளோடு துணை நின்ற குழுக்களோ தமிழர்களின் தீர்வு விடயத்தில் சற்று விலகி நிற்கவே பார்க்கின்றது.இதுவே நிதர்சனம். ஞானசார தேரரின் கதையைக் கேட்டு உண்ணாவிரதத்தை விட்டவர்கள் இன்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *