எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)

தான் ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக மாறுவதற்கு முக்கிய காரணம் நுவன் குலசேகர என டுவிட்டர் காணொளியின் மூலமாக தெரிவித்துள்ளார்.

குலசேகர நேற்றைய தினம் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். இலங்கை கிரிக்கெட் சபையிடம் தனக்கு ஒரு நேற்றைய தினம் திடீரென அவர் ஓய்வை அறிவித்தார்.

எற்கனவே, லசித் மாலிங்க நுவன் குலசேகர தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கையில், குலசேகரவுடன் விளையாடிய காலம் மற்றும் தனது பந்துவீச்சில் நுவன் குலசேகரவின் பங்களிப்பு என்பவை தொடர்பில் மாலிங்க காணொளி மூலம் கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த காணொளியில்

“நானும், குலசகேரவும் 14 வருடங்கள் ஒன்றிணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளோம். அவர் இன்று (நேற்று) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை நான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக மாறுவதற்கு 90 சதவீதமான காரணம் குலசேகரதான். அவர் முதல் 5 ஓவர்களை சிறப்பாக வீசி துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் வழங்கியதாலேயே நான் விக்கெட்டுகளை கைப்பற்றினேன். அதற்காக குலசேகரவுக்கு எனது நன்றிகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *