முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் ஆடை வரையறுக்கப்பட வேண்டும்

(UTVNEWS | COLOMBO) – முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை தொடர்பான கலந்துரையாடலொன்றை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஒழுங்கு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடல் இஸ்லாமிய கற்கைகள் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் பல இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில், பரீட்சைகள் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை காரணமாக கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பல பிரச்சணைகள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டது.

மேலும்,ஷரீஆ அனுமதித்த வரம்புகளுக்குள் அரசின் சட்டங்கள், பரீட்சை விதிமுறைகள் என்பவற்றை அனுசரித்து முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை தொடர்பாக பின்வரும் அம்சங்களில் இதன்போது உடன்பாடு ஏற்பட்டது.

அதாவது பாதுகாப்பு நோக்கம், பரீட்சை விதிகளுக்கு அமைய முகத்தையும் மணிக்கட்டுக்கு வெளியே உள்ள பகுதியும் தெரியக்கூடிய உடையணிதல்

ஹிஜாப் என்பது தனியே கறுப்பு நிற அபாயாக்கள் அணிவதை மட்டும் வலியுறுத்தவில்லை. பல்வேறு நிறங்களில் பல்வேறு வடிவமைப்புடைய உடைகளை அணிந்து வருவது வரவேற்கத்தக்கது.

சில பாடசாலைகளின் சீருடையில் ஒரு பெரிய புடவைத் தொப்பி பின்னால் முதுகுவரை தொங்கவிடப்படுகிறது. இதனை அணிவதால் பரீட்சை விதிகளை மீறுவது இலகு. ஆகவே மேற்பார்வையாளர் இவர்களை கடுமையாக பரிசோதிக்க வேண்டிவரும். இதனால் சில பரீட்சை மண்டபங்களில் அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. ஆகவே காதை மூடி ‘ஸ்கார்ப்’ அணிவது நல்லது.

பெண் பரீட்­சார்த்­திகள் காதை மூடி ‘ஸ்கார்ப்’ (Scarf) அணிந்து வந்து பரீட்சை மண்டபத்தில் மட்டும் காதைத் திறந்து விடுவது சந்தேகங்களை நீக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பரீட்சார்த்திகள் மேற்குறிப்பிட்ட அம்சங்களில் கரிசனை காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம். என அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு எதிர்பார்க்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *