(UTVNEWS | COLOMBO) -தேசிய பட்டியல் உறுப்பினராக மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்திற்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் ராஜபக்ஸ அணியினர் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிடமாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
சந்திரிக்காவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவருக்கு வழங்குமாறு சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் யோசனை ஒன்றை முன்வைத்து நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக
சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.