சீரற்ற காலநிலை – சுமார் 80 ஆயிரம் பேர் பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையினால் கம்பஹா மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 43 000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

வௌ்ளத்தினால் 14 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பல பிரதேசங்களில் கடற்படையினர் உதவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத் தளபதி வைஸ் எட்மிரல் பியல் டீ சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசர நிலைக்கான குழுக்கள் பல பல்வேறு இடங்களில் செயற்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *