முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 166 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது – 20 தொடரில் விளையாடுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *