மற்றுமொரு தாக்குதல்; பேராயர் ஜனாதிபதிக்கு கடிதம்

(UTVNEWS | COLOMBO) – கர்தினால் மல்கம் ரஞ்சித் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மற்றுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரித்துள்ளார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இம் மாதம் 15 திகதி முதல் 25 திகதி வரையான காலப்பகுதியில் மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு தரப்பினரும் காவல்துறையினரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவாது.

இது குறித்த முதலாவது எச்சரிக்கையை கர்தினால் மல்கம் ரஞ்சித்தே விடுத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துமாறு காவல்துறையினரையும் படையினரையும் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை தாக்குதல்கள் குறித்த புதிய தகவல்களை அரச புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்துள்ளனர்.

இதன் பின்னர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.இதனை தொடர்ந்து கடற்படை விமானப்படையினரும் இது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் படையினர் காவல்துறையினருக்கு உதவுவார்கள் என தெரிவித்துள்ளன.

கத்தோலிக்க தேவாலயங்களிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து காவல்துறையினர் ஹோட்டல்களிற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களை பெறத்தொடங்கியுள்ளனர் மேலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் எவராவது தென்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.

வன்முறைகளை திட்டமிடுபவர்கள் யார் என்பது தங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் நிலைமைய உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *