(UTV|COLOMBO) – சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் வி.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதிக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்