ஜஸ்டின் ட்ரூடோ: மீண்டும் கனடா பிரதமராகிறார்

(UTVNEWS | COLOMBO) – கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

பாராளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி 156 ஆசனங்களை பெறும் நிலை காணப்படுகின்றது.

வலதுசாரி பழமைவாத கட்சிக்கு 122 ஆசனங்கள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் கைப்பற்றிய ஆசனங்களை விட அதிக ஆசனங்களை இந்த கட்சி கைப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளபோதிலும் பாராளுமன்றத்தில் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனினும் பிரதமரின் லிபரல் கட்சி பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்த நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *