350 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான கடன் காலம் தாழ்த்துதல் மூலம் HNB இன் COVID நிவாரண நிதிக்கு மதிப்பு சேர்கிறது

(UTV|கொழும்பு) – தேசிய பொருளாதாரத்தின் அடிமட்ட மறுமலர்ச்சிக்கு நிதியளிப்பதற்கான முயற்சிகளை உருவாக்குதல் உலகிலுள்ள சிறந்த 1000 வங்கிகள் தரவரிசையில் இலங்கையின் மிக உயர்ந்த தரவரிசையில் இடம்பிடித்த தனியார்துறை வங்கியான HNB PLC, COVID-19 தொற்றுநோய் காரணமாக மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனஙங்களுக்கு உதவியளிக்கும் வகையில் மொத்தமாக 350 பில்லியன் ரூபா கடன் காலம் தாழ்த்துதலை கடந்த ஜூன் மாதம் இறுதியில் வழங்கியுள்ளது.

மொத்தத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் முழு அளவில் 65,000 க்கும் மேற்பட்ட கடன் காலம் தாழ்த்துதலை வழங்கியுள்ளதுடன் இவர்களில் பெருநிறுவன சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மைக்ரோ சில்லறை வாடிக்கையாளர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசு தலைமையிலான முன்முயற்சிகளுடன் இணைந்து செயற்படுவதனால் HNB இனால் 9.5 பில்லியன் ரூபாவிற்கு இலங்கை மத்திய வங்கியின் மூலம் ஆண்டுக்கு 4% சலுகை வட்டி விகித அடிப்படையில் நடைமுறை மூலதன கடன் (WC) வசதிகளை வழங்கியுள்ளதுடன், இது ´சௌபாக்யா COVID-19 மறுமலர்ச்சி வசதி´ மற்றும் ´கடன் உத்தரவாதம் மற்றும் வட்டி மானியம்´ ஆகிய திட்டங்களின் ஊடாக மேற்கொள்ளபட்டுள்ளது.

சௌபாக்கியா நிதியத்திற்கு உட்படுத்தப்படாத சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகரூபவ் HNB தனது நிதியத்திலிருந்து 5 பில்லியனை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு COVID நிவாரண நிதியாக 8% சலுகை வட்டியில் கடனாக வழங்கியுள்ளது.

´நமது பிராந்தியத்திலுள்ளவர்களுடன் மற்றும் பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை COVID-19 பரவுவதை தணிப்பதில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது அதேநேரம் அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் உதவுகிறது. இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து இந்த நெருக்கடியான காலத்திலும் தொற்றுநோயால் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தனது பங்கை செய்ய முயன்றுள்ளது.´

´சலுகைகளை வழங்கும் நடைமுறை மூலதனக் கடன்கள் மற்றும் கடன் காலம் தாழ்த்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க உதவிகள் வழங்கப்பட்டாலும் இன்னும் பல வாடிக்கையாளர்கள் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் இன்னும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் HNB எப்போதும் உங்களுடன் நிற்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். மேலும் சவால்கள் இருந்தபோதிலும் வலுவான மீட்சியைப் பெறுவதற்காக நிறுவனங்கள் தங்கள் இருப்பு நிலைகளில் இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம்.´ என HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் தெரிவித்துள்ளார்.

HNB இன் COVID நிவாரண திட்டத்தின் கீழ் 1 பில்லியன் ரூபாவிற்கு குறைவாக வருடாந்தர வருவாயை ஈட்டுவோருக்கு பணி மூலதன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா வரை உடனடி கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க நுழைந்த முதல் தனியார்துறை வர்த்தக வங்கியாக HNB இக்கு இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரித்த நீண்டகால வரலாற்றைக்கு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உதவ வங்கி மேலும் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை அடுத்து மறைமுகமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு கடன் காலம் தாழ்த்துதல் மற்றும் பணி மூலதன கடன்களை வழங்கியது.

தொழில்நுட்ப புத்தாக்கங்களில் நிரூபிக்கப்பட்ட முன்னோடி வங்கியின் பங்கைக் கருத்திற் கொண்டு Lockdown காலப்பகுதியில் அதன் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை உத்தரவாதம் அளிப்பதற்காக விரிவான டிஜிட்டல் வங்கிச் சேவைகளின் வடிவத்தில் விரைவான பங்களிப்பை HNB இனால் வழங்க முடிந்தது. இந்நேரத்தில் HNB 714 பிரதேசங்களுக்கு நான்கு ATM உடன் கூடிய வாகனத்தை அனுப்பியதுடன் வங்கிச் சேவைகளுக்கான வசதிகள் எட்டாத வாடிக்கையாளர்களுக்காக மேலதிகமாக கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பணத்தை மீளப் பெறவோ அல்லது வைப்பு செய்யவோ முடியும் என்பதை உறுதி செய்தது.

வீட்டு விநியோக சேவைகள் மற்றும் பணமில்லாத பரிமாற்றங்களுக்கான தேவைகள் அதிகரித்து வருவதால் வங்கியின் மிகவும் விரும்பப்படும் MOMO முறை – குறைந்த கட்டண ´ப்புளுடூத்´ சாதனம் உடனான கொடுப்பனவுகளை கடன் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் மேற்கொள்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்குநர்களிடமிருந்து பாரிய வரவேற்புகள் கிடைத்தன. இதேபோல் HNB SOLO – வங்கியின் QR குறியீடு அடிப்படையிலான மொபைல் பணப்பைக்கான தேவையும் முடக்கல் (Lockdown) காலத்தின் போது அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பொருட்களுக்கு பணம் செலுத்தும் போது சமூக இடைவெளியை பேண முடியும் என்ற நன்மையை இது பாவணையாளர்களுக்கு வழங்கியது.

இக்காலப்பகுதியில் AppiGo போன்ற சேவைகளை HNB துரிதமாக மேம்படுத்தியது – இது புரட்சிகரமான விற்பனைத் தளமாக இலத்திரணியல் வணிக திறன்களைக் கொண்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவுகிறது – இலங்கை முழுவதும் நடைபெற்று வரும் plug-and-play புரட்சியில் இணைய வர்த்தகங்களுக்கு உதவுகிறது.

வாடிக்கையாளர் சேவை மத்திய நிலையங்கள் 252ஐ நாடு முழுவதிலும் நடத்திச் செல்லும் HNB இலங்கையில் தொழில்நுட்ப ரீதியில் பாரிய புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியாகும். அண்மையில் வங்கி தொடர்ச்சியாக பல விருதுகளை வென்றதுடன் ´த பேங்கர்´ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தமைக்கு மேலதிகமாக இலங்கையின் விசேட வாடிக்கையாளர் வங்கியென்ற விருதினையும் வென்றது.

உள்ளுரில் பிஸ்னஸ் டுடே Top 10 தரப்படுத்தலில் முன்னிலையிலுள்ள HNB 2019ஆம் ஆண்டுக்கான விசேட நிறுவன குடிமகன் என்ற விசேட விருது வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தது. சர்வதேச கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது வங்கியான HNB க்கு Moody’s Investors Service இனால் B1 தரப்படுத்தலும் வழங்கப்பட்டது. அண்மையில் Fitch ratings மூலம் HNB இன் தேசிய நீண்டகால வகைப்படுத்தல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு Fitch ratings இன் இரண்டு இடங்களைக் கடந்து மேலே சென்று ‘AA+(lka)’ கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள HNB க்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *