HNB இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக 11வது தடவையும் ஏஷியன் பேங்கர் விருது வழங்கும் நிகழ்வில் விருதுக்கு தகுதி பெற்றது

(UTV|கொழும்பு) – HNB வெற்றிகரமாக 11ஆவது தடவையும் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக 2020ஆம் ஆண்டில் ஏஷியன் பேங்கர் வாடிக்கையாளர் நிதி சேவைகளுக்கான விசேட விருது வழங்கும் நிகழ்வில் (Asian Banker’s International Excellence in Retail Financial Services 2018 awards Ceremony) விருதுக்கு தகுதி பெற்றது.

விசேடமான பாரிய சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலுக்கு மத்தியில் வங்கியின் நிலையான மேம்பாடு மற்றும் நடவடிக்கைகள், தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் பிரிவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு HNBக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நன்மதிப்பு மிக்க, பெறுமதியான விருதினை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கிடைத்தமை எமக்கு மிகவும் கௌரவத்தை அளிக்கிறது. எமது ஒப்பிட முடியாத தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள், விசேடத்துவத்தை நோக்கி தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு HNB குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் எப்போதும் HNB வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றமை எமது வெற்றிக்கு விசேட காரணமாகும். எப்போதும் இல்லாத கொவிட் 19 தொற்றுநோயின் போது, வர்த்தகத்தின் வெற்றியை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு மற்றும் சிக்கல்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் சேவை செய்வதற்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்ற எனது குழுவினர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர். அவ்வாறான தீர்மானம் மிக்க காலப்பகுதயில் HNB மதிப்புக்குள்ளாகியமையை இட்டு நான் மகிழ்ச்சியடைவதோடு, இந்த மிகவும் பொருத்தமான விருதினை எமது ஒட்டுமொத்த குழுவினருக்காகவும் சமர்ப்பிக்கிறேன். என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் தெரிவித்துள்ளார்.

HNB வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக சந்தோஷப்படுத்துவதற்காக பாரிய அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்ட அவர் வங்கிக்குள் மேற்கொள்ளப்படும் பாரிய மாற்றமடையும் பயணத்தில் முன்னோக்கிச் செல்கையில் டிஜிட்டல் மாற்றமானது மிகவும் முக்கியமான செயற்பாட்டை மேற்கொள்வதாகவும் வாடிக்கையாளர் வங்கி சேவைகள் நடவடிக்கைகளை மேலும் விஸ்தரித்து வங்கியின் பெறுமதி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்குமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வங்கி தற்போது பல்நோக்கு டிஜிட்டல் கட்டமைப்புகளை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதுடன் அதனூடாக டிஜிட்டல் வங்கி தயாரிப்புக்களை துரிதமாக சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு வங்கிக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்படும். இதன்போது, ஃபின்டெக்ஸ் (Fintechs) உடன் சந்தைக்கு நெருக்கமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உற்பத்தி / சேவைகளை ஆரம்பிப்பதற்காக இலகுவான தொழில்நுட்ப தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வங்கிக்கு மேலும் சந்தாப்பம் கிடைத்துள்ளது.

வாடிக்கையாளர் வங்கியியல் HNBஇன் முன்னணி பிரிவாக அமைவதுடன் அதில் நாடு முழுவதிலும் பரந்திருக்கும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. 252 வங்கிக் கிளைகள் மற்றும் 787 தன்னியக்க இயந்திரங்களைக் கொண்ட விரிவான வாடிக்கையாளர் சேவை வலைப்பின்னலுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்களுக்கு சமூக தனிமைப்படுத்தலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக, விரிவான மற்றும் பாதுகாப்பான முறைமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக டிஜிட்டல் வங்கி தயாரிப்பு சேவை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னோடியாகவும் உள்ளது.

விசேடமாக கொவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் வங்கிக் கணக்கு, பற்று அல்லது கடன் அட்டைகள் ஊடாக தொடர்புகொள்ளும் டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்கான வர்த்தக சேவைகள் மத்திய நிலையமாக (one-stop-shop) செயற்படும் HNB SOLO போன்ற வேகமாக பிரபல்யமடைந்துள்ள புதிய கண்டுபிடிப்புக்களைக் கொண்ட தளங்களை அறிமுகப்படுத்தியதுடன் HNBஇன் தொழில்நுட்பம் குறித்த தலைமைதுவத்தின் திறன் இந்த வெற்றியின் ஊடாக உறுதிப்படுத்துவதற்கு உதவியாக அமையும் மற்றுமொரு விசேட அங்கமாகும்.

இந்த App ஊடாக LankaQR குறியீட்டை Scan செய்து கொடுக்கல் வாங்கல்களை முழுமையாக்கும் செயற்பாட்டிற்கு மேலதிகமாக டிஜிட்டல் கணக்கினை ஆரம்பித்தல், HNB அட்டை தொடர்பாக உள்ள சலுகைகளை பரிசீலித்தல், வர்த்தகர்கள் ஊடாக பரிசுக் கூப்பன்களை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் App ஊடாக நேரடியாக வர்த்தகர்களுக்கு பணத்தை செலுத்தும் வசதிகள் உள்ளிட்ட மேலும் பல நன்மைகளை உள்ளடங்குகின்றன. HNB SOLO App ஊடாக பாவனையாளர்கள் தாங்கள் விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்காக கட்டணம் செலுத்துகையில் விற்பனை நிலையங்களுக்கு செல்லாமல் வர்த்தகர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பற்றுச் சீட்டுக்களுக்கான கொடுப்பனவை செலுத்தும் வசதிகள் போன்ற ஏனைய விசேட அம்சங்களும் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்கியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு வேலைதிட்டத்தின் அங்கமாக தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதுமை நிறைந்த வங்கி தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் பலவற்றை HNB அண்மையில் அறிமுகம் செய்தது. உதாரணமாக, HNB Solo e-wallet போன்ற புதிய தயாரிப்புக்கள் வாடிக்கையாளர்களுக்கு விசேடமான பெறுமதியொன்றை சேர்த்துள்ளது. சில்லறை வங்கியியலில் HNBஇன் வெற்றிக்கு பங்காளியான மற்றுமொரு விசேட அம்சமாக அமைவது புதுமை நிறைந்த கண்டுபிடிப்புக்கள் மற்றும் தற்போது நிலவும் தயாரிப்புக்களுக்கு சேர்க்கப்பட்டுள்ள பெறுமதியாகும். கடந்த ஆண்டில் தனிப்பட்ட சேமிப்பாளர்களுக்காக ஊக்க அடிப்படையிலான சேமிப்பு தயாரிப்புக்களை நாங்கள் ஆரம்பித்ததோடு, இது எமது CASA தளத்திற்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது. கூடுதலாக, வீட்டுக் கடன் மற்றும் குத்தகை போன்ற வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு நன்மைகள் அடங்கிய கிரெடிட் கார்டுகளை வழங்கியதோடு, அதேநேரத்தில் எமது இணைய கட்டணம் செலுத்தும் அணுகுமுறைகளில் பாதுகாப்பான e- commerce தளத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் VISA CyberSource உடன் இணைந்துள்ளோம். என HNBஇன் வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன வங்கி நடவடிக்கைகள் தொடர்பிலான பிரதி பொதுமுகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை தற்காலிகமாக இடைநிறுத்துதல், நிவாரண விலைக்கு மூலதனக் கடன்களை பெற்றுக் கொடுத்தல், கடன் பத்திரங்களுக்காக குறைந்த பட்ச கொடுப்பனவுகளை குறைத்தல் போன்றவை வாடிக்கையாளர்களுக்கு தற்போது குறிப்பிடத்தக்க அளவு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் மிகவும் விருதுபெற்ற வங்கியான HNB ´த பேங்கர்´ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகளில் சிறந்த வங்கிக்கான விருதிற்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையும் முன்மொழியப்பட்டதுடன் 2019இல் யூரோமணி சஞ்சிகையினால் இலங்கையின் சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டது.

கடந்த வருடம், ஏஷியன் பேங்கர் சஞ்சிகையினால் வழங்கப்பட்ட இலங்கையின் சிறந்த முகாமைத்துவம் கொண்ட வங்கி என்ற விருதினையும் HNB இன் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸூக்கு இலங்கையின் மதிப்பு மிக்க ஆசிய வங்கியாளர் சஞ்சிகையினால் ‘CEO Leadership Achievement’ விருது வழங்கியதன் மூலம் ஹட்டன் நெஷனல் வங்கியின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்துள்ளமை சிறந்த உதாரணமாகும்.

தேசிய ரீதியில், மரியாதைக்குரிய பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் அறிவிக்கப்பட்ட சிறந்த நிறுவனங்கள் 30க்குள் (Business Today Top 30) முதலாவது இடத்தை வென்றெடுப்பதற்கு HNBக்கு முடிந்ததுடன் அண்மையில் இலங்கை சர்வதேச வர்த்தக சபை மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனம் (CIMA) ஆகியவற்றால் மிகவும் பாராட்டத்தக்க முதல் 10 நிறுவனங்களில் HNB உள்ளதுடன் LMD சஞ்சிகையினால் Top 100 Club இல் அகில இலங்கை வங்கிகளின் முதல் இடத்தைப் பெற்றதன் மூலம் சிறந்த சாதனைப் படைத்தது. இது வங்கியின் கடந்த 25 ஆண்டு செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏஷியன் பேங்கர் என்ற சஞ்சிகையானது நிதி சேவை சமூகத்திற்கு வர்த்தகம் குறித்த தேவையான மூலோபாய அறிவினை வழங்கும் பிராந்தியத்தில் மிகவும் மதிப்புக்குரிய வழங்குநர் என்ற நன்மதிப்பைக் கொண்ட சஞ்சிகையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *