(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னெடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சமாதானப் பணிகளுக்கு சாதனங்கள் தேவைப்படுவதால் அதற்கான உரிய பட்டியலொன்றையும் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாங்கள் எங்களுக்கு தேவையான ஆயுத தளபாடங்கள் குறித்த பட்டியலொன்றை வைத்துள்ளளோம் அவற்றை குறுகிய காலத்தினுள் பெற விரும்புகின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய உடன்படிக்கையொன்று தற்போதும் நடைமுறையில் உள்ளது அது முடிவடைந்ததும் ரஷ்யாவுடன் புதிய உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவோம் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.