கொவிட் – 19 தொற்று காலப்பகுதியில் சுகாதார – பாதுகாப்பு நடவடிக்கைகளை மீள்வரையறை செய்யும் Pelwatte

(UTV | கொழும்பு) –  புகழ்பெற்ற உள்ளூர் பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy, தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் காலப்பகுதியில் அதன் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தனது அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை வலியுறுத்தும் முகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில், அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, நுகர்வோர், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்நிறுவனம் 2020 மார்ச் மாதம் இலங்கையில் தொற்றுநோயின் முதல் அலை ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து பல முன்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

உலகளாவிய தொற்றுநோயான கொவிட், உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் வணிகங்களையும், வாழ்க்கையையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக, பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி மற்றும்
முகாமைத்துவ நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளை மறுபொறியியல் செய்ய வேண்டியிருந்தது.

இத்தகைய சூழலில், தொழில்துறையில் இன்றளவும் பின்பற்றப்படாத பல்வேறு காரணிகளுடன் கூடிய பல அணுகுமுறைகளை Pelwatte நிறுவனத்தால் முன்னெடுக்க முடிந்துள்ளது. அரசாங்கத்தின் புதிய ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்துறையில் முன்நிலையில் உள்ளோரின் முன்வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவினைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, Pelwatte ஊழியர்களுக்கு வழக்கமான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வுகள் நடாத்தப்படுகின்றன.

நிறுவனம் மற்றும் அதன் அனைத்து செயல்முறைகளையும் கண்காணிக்க பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதர அமைச்சின் வழக்கமான வருகைக்கான வசதிகளையும் வழங்க இந் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

Pelwatte, தேவையான சுகாதார பொருட்கள் மற்றும் அகற்றக்கூடிய சுய பாதுகாப்பு உபகரணங்கள் அதன் ஊழியர்களுக்கு உடனடியாக கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கொவிட் – 19 பாதுகாப்பு நெறிமுறைகளை ஊழியர்கள் உறுதியாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான நிர்வாகத்தின் அர்ப்பணிப்பின் ஓர் அங்கமாக தொழிற்சாலை மற்றும் அதன் வளாகத்திலும் ஆக்கபூர்வமான சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

தொற்றுநோய் நெருக்கடி காலப்பகுதியில், ஊழியர்களின் தொழில் வழங்குநராக அவர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியதை Pelwatte புரிந்து கொண்டுள்ளது. மிகவும் நெருக்கடியான காலப்பகுதியில் கூட ஊழியர்களின் ஊதியம் மற்றும் வேலையை பணயம் வைக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.

பிற வணிகங்கள் மூடப்பட்ட போதும், Pelwatte நிறுவனம் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் வணிகங்களை நடாத்துவதற்கும், அதன் தொழிலாளர்களை வலுவூட்டும் அரசாங்கத்தின் கோரிக்கையை ஆதரிப்பதாகவும் இது அமைந்துள்ளது. தமது தொடர்ச்சியான உற்பத்திச் செயன்முறை மூலம் இந்த உற்பத்தியினை தமது வருவாய் மூலமாகக் கருதும் 10,000 இற்கும் மேற்பட்ட பாற்பண்னையாளர்களின் குடும்பங்களுக்கு உதவ Pelwatte நிறுவனத்தால் முடிந்துள்ளது.

தனது பாரிய ஊழியர் வலையமைப்பின் மீதான Pelwatte நிறுவனத்தின் அர்ப்பணிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த Pelwatte Dairy இன் மனிதவள முகாமையாளர் ஹர்ஷன் ஜீவகுமார, "நாங்கள் எங்கள் ஊழியர்களில் 50% பேரை மட்டுமே ஆபத்தான
நேரத்தில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டியிருந்தது. மேலும், அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்தை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்ததுடன் அதே நேரத்தில் பயன் அளிக்கக்கூடிய போனஸ் உடன் வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு வெகுமதி அளித்தோம்.

நாட்டின் மற்றும் உலக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மிகக் குறுகிய காலத்தில் நிறுவனத்தின் மாறும் மற்றும் நிலையான பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை திருத்தி புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

செயன்முறையை ஒரு ஊழியரின் உள்நுழைவு முதல் வெளியேறும் வரை நாம் பலப்படுத்தியுள்ளோம் – தொற்று மற்றும் தொடர்பைக் குறைக்கும் அதே நேரத்தில் எங்கள் ஊழியர்கள் தங்கள் குடும்பங்களை பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி
செய்கிறோம். உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக இந்த இணக்கங்களைப் பின்பற்றுவதில் முன்னணியில் இருப்பதால், இந்நிறுவனத்தால் நடவடிக்கைகளை சீராக அணுக முடிந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து ஊழியர்களும், வருகை தருவோரும் அதிகாரிகள் கோரியபடி ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர், இதன் மூலம் பரவல் ஏற்பட்டால் தேவையான கண்காணிப்பு மற்றும் தடமறிதல் நடவடிக்கைகளை திறம்பட செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்படுகின்றது.

Pelwatte தனது விற்பனை நிலையங்களை ‘Stay Safe Sri Lanka’ கண்காணிப்பு அமைப்புடன் பதிவு செய்துள்ளமையின் மூலம் அதன் செயற்பாடுகளை மேலும் பயன்மிக்கதாக்கியுள்ளது," என்றார்.

Pelwatte தனது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளக தொடர்பாடல் மூலம் e-flyersகளை அனுப்பி வருகின்றது. இதன் உற்பத்தித் தொழிற்சாலையில் நீர் குளியல், கிருமிநாசினி மெட்ஸ், கை தூய்மிப்பான், வழக்கமான வெப்பநிலை பரிசோதனைகள் மற்றும் பற்றீரியா, கிருமிகள் மற்றும் வைரஸ்களை வினைத்திறனாக தொற்று நீக்கம் செய்யும் என நம்பப்படும் நீராவி இயந்திரம் மூலமும் பாதுகாப்பு மீளுறுதி செய்யப்படுத்தப்படுவதை உறுதி செய்ய Pelwatte நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்போது வரை, நாங்கள் நடாத்திய அனைத்து பி.சி.ஆர் சோதனை முடிவுகளின் பிரகாரம் எவரும் தொற்றாளராக அடையாளம் காணப்படவில்லை. எனினும், யாரேனும் ஒரு நோயாளி தொற்றாளராக உறுதி செய்யப்பட்டால் அதற்கான வினைத்திறனான போக்குவரத்துக்கான பொறிமுறையை உறுதி செய்வதற்கும், நோயாளிகளை செயற்திறன்மிக்க வகையில் தடமறியவும் தேவைப்படுத்தும் செயல்முறைகளையும் நாங்கள் நிறுவியுள்ளோம். பொருட்களை ஏற்றும் லொரிகள் மற்றும் வாகனங்கள் ஒழுங்காக சுத்திகரிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பேசின்கள் மற்றும் பானைகளும்
அதற்கேற்ப சுத்தம் செய்யப்படுவதுடன், நீராவி தூய்மையாக்கல் மற்றும் தொற்று நீக்கமும் செய்யப்படுகின்றன. வாகன ஓட்டுநர்கள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் கட்டாயமாக நீராட வேண்டும்.

அருகிலேயே வசிப்பதால் தொழிற்சாலை ஊழியர்களில் சுமார் 95% ஊழியர்கள் தமது சொந்த வாகனங்களிலேயே வேலைக்கு வருகின்றமையை கருத்தில் கொண்டு அவர்களை தத்தமது வாகனங்களிலேயே பணிக்கு வருமாறு Pelwatte Dairy ஊக்குவிக்கின்றது. இது பொதுப்போக்குவரத்து அல்லது நிறுவன வாகனங்களின் மூலம் பணிக்கு வருவதை ஒப்பிடும் போது அவர்களின் தொடர்பு புள்ளிகள் மற்றும் ஏனைய தொற்றுக்குள்ளாக்கும் வழிகளை மேலும் குறைக்கின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *