(UTV | இந்தியா) – நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய டாக்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை அவர் இரவுபகலாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி டாக்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் மீதி பணிகளை விரைவாக முடித்து சென்சாருக்கு அனுப்பி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தமிழ் புத்தாண்டு தினத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.