உணவகத் தொழிலில் களமிறங்கும் சோப்ரா

(UTV |  இந்தியா) – விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நியூயார்க்கில் செட்டிலான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இதற்கான முதல் பூஜை இந்து முறைப்படி சமீபத்தில் நடந்தன. அதில் கணவர் நிக் ஜோனஸ் உடன் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அடுத்த மாதம் இந்த உணவகம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *