தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், நாட்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

சேதன உரங்களை மட்டும் பயன்படுத்தி தேயிலை தோட்டங்களை பராமரிப்பது சிக்கலானது என அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

இதற்கிடையில், கண்டி – யட்டிநுவர தேயிலை உற்பத்தியளர்கள் உரமின்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

போதியளவு உரமின்மையால் தேயிலைச் செடிகள் பாதிப்படைந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *