(UDHAYAM, COLOMBO) – இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்யும் தேயிலையின் அளவை அதிகரிக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் இலங்கை வந்த சீன விவசாயதுறை பிரதி அமைச்சர் ஷெங் சேஹூவா இடையே கொழும்பில் நேற்று பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
இதன்போதே சீன விவசாயதுறை பிரதி அமைச்சர் இவ்வாறு இணக்கம் வெளியிட்டதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்