கொரோனா கண்டறிய Self Shield

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளை போன்று இலங்கையிலும் கொவிட் தொற்றினை கண்டுபிடிப்பதற்காக கையடக்க செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சில வினாடிகளில் ஒருவருக்கு கொவிட் தொற்றியுள்ளதாக என சோதிக்க கூடிய செல்ப் ஷீல்ட் என ஸ்மார்ட் கையடக்க செயலி ஒன்று இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுகாதார தகவல் தொழில்நுட்ப சங்கம் மற்றும் டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கான பொதுநலவாய மையம் இணைந்து சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் மக்கள் தங்கள் கொவிட் தொற்று தொடர்பில் தங்கள் சுகாதார நிலைமைகளை பரிசோதித்து பார்த்து விழிப்புணர்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். சுகாதார நிலைமையில் மாற்றங்கள் இருந்தால் கூடிய விரைவில் வைத்திய சிகிச்சைக்காக செல்ல முடியும்.

சில நிமிடங்களில் பயனாளர்களின் நுரையீரலின் செயல்பாட்டைக் கண்காணிக்கலாம், அவர்களின் உடல்நிலை குறித்த சோதனை அறிக்கைகளைப் பெறலாம் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றலாம், அந்த அறிவுறுத்தலுக்கமைய நோயாளிகள் தாமதமின்றி வைத்திய சிகிச்சையை பெற முடியும்.

இது தொடர்பான தரவுகள் சுகாதார அமைச்சின் வைத்திய குழுக்களுடன் தானாக பகிர்ந்துக் கொள்ளப்படும். இதனை பயன்படுத்துவதன் மூலம் இலங்கையர் ஒருவர் கொவிட் தொற்றினால் ஆபத்தான நிலைமைக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ள முடியும்.

செல்ப் ஷீலட் எனப்படும் இந்த செயலி தற்போது Google மற்றும் Apple ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும். Self Shield என டைப் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும். பதிவிறக்கம் செய்த பின்னர், அந்த செயலியில் மக்கள் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படும் தனிப்பட்ட தகவல்கள் பயனாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *