சர்ச்சையில் சிக்கிய பாகுபலி 2- திரையிடல் நிறுத்தமா?

(UDHAYAM, COLOMBO) – ஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி-2 வசூல் சாதனை படைத்து தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.இன்று வரை அரங்கு நிறைந்த படமாக ஓடி கொண்டிருக்கும் பாகுபலி -2 சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது வளைகுடா நாடுகளில் இதன் திரையிடல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்த போது “’பாகுபலி 2’ தயாரிப்பாளர் படத்தின் இந்தி போக இதர மொழிகளின் வெளிநாட்டு உரிமையை ஒருவருக்கு கொடுத்திருந்தார். அவர் தான் ஒட்டுமொத்த தமிழக வெளியீட்டு உரிமையையும் பெற்றிருந்தார். இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பிரச்சினையில்தான், படம் வெளியான அன்று முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தற்போது இருவருக்கும் இடையே பணப்பிரச்சினைகள் இன்னும் முடிவாகவில்லை. 2 வாரத்துக்கு மட்டுமே, KDM எனப்படும் பட உரிமையை வளைகுடா நாடுகளுக்கு ‘பாகுபலி 2’ தயாரிப்பாளர் கொடுத்திருந்தார். அதனை ரத்து செய்துவிட்டதால், இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் அப்படம் நீக்கப்பட்டு, விளம்பரங்களும் நிறுத்தப்பட்டன.

அவுட்ரேட் (OUTRATE) முறையில் வாங்கியிருந்தாலும் தற்போதுள்ள லாபத்திலும் பங்கு கேட்டு வருகிறார் தயாரிப்பாளர். இந்த சர்ச்சையால் பட வெளியீடு நிறுத்தப்பட்டது. நல்ல வசூல் செய்துக் கொண்டிருப்பதால்

கண்டிப்பாக படத்துக்கு பின்னடைவு தான் ” என்று கூறுகிறார்கள்.

மேலும் வளைகுடா நாடுகளில் வாசிப்பவர்கள் சமூகவலைத்தளத்தில் தயாரிப்பாளர் ஷோபு மற்றும் ‘பாகுபலி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *