‘இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன்..’ – பூஜா

(UTV |  சென்னை) – தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.

தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்தார். அந்த சமயம் ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது.

அடுத்த பாடலை வெளியிடும் சிம்பு படக்குழு பூஜா ஹெக்டே இப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக மிரினல் தாக்கூர் நடித்திருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘சீதா ராமம்’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மிரினல் தாக்கூருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ”அந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன். இனி அப்படி ஒரு வாய்ப்பு வருவது கடினம் தான்” என்று தனது நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *