ஜேம்ஸ் பொண்ட் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – துப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பொண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.

ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பொண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) நேற்று காலமானார்.

கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த இவர், ஸ்விசர்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். மோரேவின் மரண செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் பிறந்த இவர், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமல்லாது வேறு சில ஹொலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

யூனிசெப் அமைப்பின் நலத்தூதராகவும் பணியாற்றியுள்ள ரோஜர், சுகாதாரப் பணிகளுக்காக அதிக அளவு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளார். ரோஜரின் மறைவுக்கு உலக சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

[ot-video][/ot-video]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *