பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை?

(UDHAYAM, COLOMBO) – போஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் கவர்ச்சி நடிகை அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ்.

29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன் மகள் தற்கொலையில் சூழ்ச்சி உள்ளது என அஞ்சலியின் அம்மா தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தான் பிரபல நடிகை கிரித்திகா வீட்டில் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இன்னொரு நடிகை தூக்கு போட்டு இறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *