சமூக ஊடகங்கள் பற்றி ஆராய ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் இன்று இலங்கை வருகை

(UTV|COLOMBO)-வட்ஸ்எப் சமூக வலைத்தளத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு தளர்த்தப்பட்டதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ட்ரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

 

கடந்த 7ஆம் திகதி தொடக்கம் வட்ஸ்எப் சமூக வலைத்தளத்தில் பல்லூடக அம்சங்களையும், காணொளிகளையும் பகிர்வதற்கு பகுதி அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

 

சமூக ஊடகங்கள் வாயிலாக இன முறுகலையும், வன்முறைகளையும் பரப்பக்கூடிய விடயங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதை அடுத்து, பல சமூக ஊடக தளங்களை அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியிருந்ததென ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.

 

ஜப்பானிய விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கையின் சமகால நிலவரத்தை ஆராய்ந்தார். அதன் பின்னர் வைபர் மீதான தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எவ்வாறேனும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதத்தையும், வன்மப் பேச்சுக்களையும் பரப்புவதை தவிர்ப்பதற்கு முறையான ஒழுங்குறுத்தல் நடைமுறை அவசியம் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

 

இதன் பிரகாரம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கை வந்து, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் கூட்டமொன்றில் கலந்து கொள்வார்கள். தொலைத்தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். சமூக வலைத்தளங்களை முறையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட பின்னர் ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *