(UTV|COLOMBO)-சரியான உணவுக் கொள்கை மற்றும் நடைமுறையின் மூலம் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று போஷாக்குத் துறை வைத்தியர் திருமதி சுஜீவா விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நீரிழிவு, கொழுப்பு, சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்களையும், இதேபோன்று இரத்த அழுத்த தாக்கத்திற்கு உள்ளானவர்களையும் இவ்வாறான நடைமுறையின் மூலம் குணப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘ஹெல சுவய’ மத்திய நிலையத்தில் நச்சுத்தன்மையற்ற அரிசி மற்றும் கஞ்சி வகைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் போஷாக்குத் துறை வைத்தியர் திருமதி சுஜீவா விக்ரமசிங்ஹ கூறினார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112-412-943 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]