விமானப்படை போர்ப்பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-தியத்தலாவை இலங்கை விமானப்படை போர்ப் பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

விமானப்படை போர்ப் பயிற்சிக் கல்லூரிக்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதியை கட்டளைத் தளபதி எயார் கொமாண்டோ டப்ளியு.ஈ.பி.டி.பெர்னாண்டோ வரவேற்றார்.

 

தியத்தலாவை இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலை அதிகாரிகள், இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமது சக்தி, அறிவு மற்றும் ஆக்கத்திறன்களைப் பயன்படுத்தி தாய் நாட்டுக்கு வழங்கிவரும் சேவைகளைப் பாராட்டி இதன்போது ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி , 67 வருடகாலமாக தாய் நாட்டின் இறைமையையும் ஆட்புல எல்லையையும் பாதுகாப்பதற்கு இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் விசேட பணிகளை பாராட்டினார்.

 

நாட்டுக்காக உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி , கடந்த காலங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின்போது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட பங்களிப்புகளைப் பாராட்டினார்.

 

விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் இலங்கை விமானப்படை உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழிநுட்ப அறிவை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமவன் ரணசிங்க, விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பத்தி ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *