மைக்கேலுடன் திருமணமா?

(UTV|INDIA)-சுருதிஹாசன் நடிப்புக்கு இடைவெளி விட்டு இருக்கிறார். லண்டனை சேர்ந்த மைக்கேலுடன் ஜோடியாக சுற்றுவதால் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவுகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தில் சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து?

பதில்:- எனது தந்தைக்கு சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் அரசியலுக்கு வந்துள்ளார். இது பெருமையாக இருக்கிறது. அரசியல்வாதி ஆனபிறகு முன்பை விட பிஸியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார். நாட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

பதில்:- எனக்கு அரசியல் தெரியாது. ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அரசியல் புரியாமல் அந்த பக்கம் போகக்கூடாது என்பது எனது கருத்து. எதிர்காலத்தில் அரசியல் ஞானம் ஏற்பட்டால் அப்போது அரசியலுக்கு வருவது பற்றி முடிவை சொல்கிறேன்.

கேள்வி:- சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏன்?

பதில்:- நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஒரு மாற்றத்துக்காக இடைவெளி எடுத்தேன். தற்போது கதைகள் கேட்டு வருகிறேன். இனிமேல் தொடர்ந்து நடிப்பேன். விரைவில் படம் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. நல்ல கதைகள் அமைந்தால் தயாரிப்பேன்.

கேள்வி:- டைரக்டு செய்வீர்களா?

பதில்:- எனது தோழிகள் டைரக்டு செய்யும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் டைரக்டருக்கு பொறுப்பு அதிகம். அதை இப்போது செய்ய மாட்டேன்.

கேள்வி:- கடவுள் நம்பிக்கை பற்றி?

பதில்:- கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கிறது. அடிக்கடி கோவிலுக்கு செல்வேன். பிடித்த கடவுள் முருகன்.

கேள்வி:- லண்டனை சேர்ந்த மைக்கேலை திருமணம் செய்துகொள்வீர்களா?

பதில்:- நான் இப்போது திருமணம் செய்துகொள்ளமாட்டேன். மைக்கேல் எனது நண்பர். இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். என் வாழ்க்கையில் ரகசியம் எதுவும் இல்லை. திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன்.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *