இலங்கையில் நடைபெறும் பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நடைபெறவுள்ள பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் லீயூ சியான் தெரிவித்துள்ளார்.

இலங்கை – சீன ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள  பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் அவர் உரையாற்றினார். இந்த வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று ஆரம்பமானது. இது 12 ஆம் திகதி வரை வரை நடைபெறவுள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தி, இலங்கையின் பொருளாதார கலாசார அபிவிருத்திக்கும் உதவப்போவதாக தூதுவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய உரையாற்றுகையில்  இலங்கை – சீன வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் இலங்கைக்கு கூடுதல் அனுகூலங்கள் கிடைத்ததாக தெரிவித்தார்.

இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட சமயத்தில் சீனா வழங்கிய உதவிகளையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *