எதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்

(UTV|INDIA)-கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.
இந்த நிலையில், இன்று படத்தின் டீசரின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
`ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *