(UTV|COLOMBO)-யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரனிடம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான விசாரனைப் பிரிவு நேற்று (24) மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலேயே இவரிடம் இன்று வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
தான் ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவிக்கவே இந்த கருத்தைத் தெரிவித்தேன். அல்லாமல், எல்.ரி.ரி.ஈ. அமைப்பை ஊக்குவிப்பது தனது நோக்கமல்ல. தான் கூறிய கருத்தின் பாரதூரம், நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போதுதான் தனக்கு விளங்கியதாகவும் அவர் இன்று பொலிஸாரிடம் கூறியுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]