திருமணம் செய்யாமலும் பெண்களால் வாழமுடியும்

(UTV|INDIA)-வை ராஜா வை, முத்துராமலிங்கம் போன்ற படங்களில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தவர் பிரியா ஆனந்த். இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தநிலையில் அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று பதில் அளித்தனர். தற்போது தமிழில் எல்கேஜி படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த், மலையாளம், கன்னட படத்திலும் நடிக்கிறார். நடிகைகளில் ஒரு சிலர் திருமணம் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் கூறி வருகின்றனர். திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ருதி ஹாசன் ஒருமுறை தெரிவித்தார்.

தற்போது அவர் லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேலுடன் டேட்டிங் செய்துவருகிறார். இருவரும் திருமணம்செய்து கொள்ள உள்ளதாக அவ்வப்போது கிசுகிசு பரவினாலும் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. ஸ்ருதியின் திருமணம் பற்றி சமீபத்தில் கமலிடம் கேட்டபோது,’நான் திருமணம் செய்துகொள்ளும்போது எனது பெற்றோரை கேட்கவில்லை. என் விருப்பப்படித்தான் நடந்தது.

அதுபோல் திருமணம்பற்றி ஸ்ருதியே முடிவெடுப்பார்’ என வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறினார். அதேபோல் பிரியா ஆனந்தும் திருமணம்பற்றி கேட்டதற்கு தடாலடியாக பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற  கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ய தேவையில்லை. அந்த காலத்தில் பெண் என்றால் கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.

ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ளாமலும் சில பெண்கள் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். என்ன படிக்க வேண்டும், எந்த வேலைக்கு செல்லவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பெண்களுக்கு யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் பக்குவமும் இருக்கிறது. சரியான ஒரு நபர் கிடைத்தால் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *