மருந்துப் பொருட்கள் உபகரணங்களின் விலைகள் விரைவில் குறைப்பு

(UTV|COLOMBO)-25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் குறைக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு சுமார் இரண்டு பில்லியன் ரூபா அரச செலவினங்களை மீதப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். தொற்றா நோய் தொடர்பாக ஆராயும் பேரவை கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.
இந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் ஏழு பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டு வந்தது. புற்றுநோய்க்கான 95 வீதமான மருந்து வகைகளின் விலைகளை அரசாங்கம் இதுவரை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *