புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து!

(UTV | கொழும்பு) – அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. விரைவில் இந்த பதவி நியமனம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். அடுத்த பொலிஸ் மா அதிபராக முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும்…

Read More

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் – எதிர்ப்பை தெரிவித்த எதிர்க்கட்சி

(UTV | கொழும்பு) – மக்கள் ஆணையின்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி,நாட்டின் சட்டத்தை கூட மீறி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, இத்தோடு நின்று விடாது,ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளையும் முடக்கி,அவரை விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியில் இருந்தும்,ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்க எடுத்த முட்டாள்தனமான முடிவை ஜனநாயகத்தை மதிக்கும் எதிர்க்கட்சி என்ற வகையில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். நாட்டில் உள்ள 220 இலட்சம்…

Read More

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலியர்களும், பலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க ஐனாதிபதி பைடன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் மேலும் சில பணயக் கைதிகளை விடுவிக்க, போர் நிறுத்தம்…

Read More

வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டங்களை அங்கீகரிப்பது குறித்து விசேட கவனம்!

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை அதிகளவில் அங்கீகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பிலான சட்டமொன்றை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் முதல் ஆயிரம் தரப்படுத்தல் நிலைகளில் காணப்படும் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டத்தை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த சட்ட வரைவு உருவாக்கப்பட்டு சட்ட வரைவு திணைக்கிழத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக இலங்கை மருத்துவ பேரவையின் அதிகாரி…

Read More

400 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், நாட்டில் நிலவும் சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள்…

Read More

தமிழர்களின் உணர்வெழுச்சிய அடக்க முடியாது – சாணக்கியன்

(UTV | கொழும்பு) – அரசும், பொலிஸாரும், படையினரும்ப யங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித்த மிழர்களை முடக்கப் பார்க்கின்றார்கள். தமிழர்களின் உணர்வெழுச்சியை அவர்களால் அடக்க முடியாது.” -இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். வீடியோவை பார்வையிட இங்கு க்ளிக் செய்க நாடாளுமன்றத்தில் அவர் நேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கியதற்காக ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் உப…

Read More

தனுஷ்க குணதிலக்க வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிசார் “நியாயமற்ற முறையில்” நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்குச் செலவு தொடர்பான வழக்கு இன்று நீதிபதி சாரா ஹகேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இதன்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் குறிப்பிடத்தக்க சில முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்படி குணதிலக்கவின்…

Read More

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளும், இந்த வாரம் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கல்வி பொதுத்…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரவிசெனிவிரட்ண வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் முன்னைய அரசாங்கம் சிதைத்தது என முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏபிசி தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் முன்னாள் அரசாங்கம் அரசியல் நோக்கங்களிற்காக பயங்கரவாத குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி இதன் காரணமாக அவுஸ்திரேலியர்கள் உட்பட பெருமளவாளவர்களின் மரணம் 2019 இல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ…

Read More

மௌலவியின் கருத்து – போராட்டத்தில் மாணவிகள்.

(UTV | கொழும்பு) – பரதக் கலைக்கு எதிராக மௌலவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.     BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More