விஜயகாந்தின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஹக்கீம் எம்.பி!

(UTV | கொழும்பு) – தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று  காலை, நேரில் சென்று மறைந்த விஜயகாந்தின் மனைவியும் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர் செய்த தியாகம் மற்றும் பல்வேறு பணிகளை குறித்து நினைவூகூர்ந்து பேசினார். இதன்போது அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி, திருச்சி…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) – அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்ட அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024 பெப்ரவரி 05 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்டத்தை 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி…

Read More

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் விலை நாளாந்தம் அதிகரித்து வருது போன்று சமகாலத்தில் மரக்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதித்துள்ளது. நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று ஒரு கிலோ கரட் 2200 ரூபா சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ கரட் 1400 ரூபாய் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது….

Read More

அரசாங்கத்தை எச்சரித்த அதிபர்கள் சங்கம்!

(UTV | கொழும்பு) – புதிய சேவை யாப்பு காரணமாக அதிபர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “பதவி உயர்வு மற்றும் சம்பளத்தை இழந்தவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான அவதானத்தை செலுத்துமாறு கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம். அமைச்சரவை பத்திரம் மூலம் இதற்கு தீர்வு…

Read More

தீர்வுக்காக சுகாதார அமைச்சரை சந்திக்கும் பதில் நிதியமைச்சர்!

(UTV | கொழும்பு) – பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று மாலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவை சந்திக்க உள்ளார். சுகாதார அமைச்சரை சந்தித்து சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை காணவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.       BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளன. எனினும் இன்று காலை சுகாதார அமைச்சர்…

Read More

வினாத்தாள் வெளியான சம்பவம் – மற்றொருவர் கைது!

(UTV | கொழும்பு) – இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவையில் உள்ள பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்…

Read More

பால் மாவின் விலை உயர்வு!

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் மன்றம் தெரிவித்துள்ளது. வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய விலை அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார். BE INFORMED WHEREVER YOU…

Read More

கெஹலியவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை – துஷார இந்துனில் எம்.பி

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவோமென பாராளுமன்ற உறுப்பினர் துஷாரா இந்துனில் தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல செய்த மோசடி மற்றும் ஊழல் அம்பலமாகியுள்ளது.ஆனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சு பதவி மாத்திரமே மாற்றப்பட்டது. அவர் இன்னும் கேபினட் அமைச்சராக இருக்கிறார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் அதிகாரிகள் சிறையில் உள்ளனர். அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே முன்னாள் செயலாளரும்…

Read More

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக ஹலால் கவுன்சில்!

(UTV | கொழும்பு) – இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹலால் கவுன்சில் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) ஆனது, 31ஆவது NCE ஏற்றுமதி விருதுகளில், மதிப்புமிக்க தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதன் மூலம், தொடர்ச்சியாக 2ஆவது வருடமாக இவ்விருதை பெற்றுள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் HAC வகிக்கும் முக்கிய பங்களிப்புக்கு ஒரு சான்றாக அமைகின்றது. கடந்த 2023 டிசம்பர் 08ஆம் திகதி இடம்பெற்ற இவ்விழாவில், தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் (NCE) இவ்விருது…

Read More