காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு – பெஞ்சமின் நெட்டன்யாகு.

(UTV | கொழும்பு) – ஹமாசுடனான யுத்தத்தின் பின்னர் காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்கும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காலவரையறையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்காகவும் பணயக்கைதிகள் வெளியேற உதவுவதற்காகவும் மோதல்களின் போது தந்திரோபாய ரீதியில் சிறிய இடைநிறுத்தங்களை செய்ய தயார் எனவும் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஏபிசி நியுசிற்கான பேட்டியின் போது மோதல் முடிவடைந்த பின்னர் காசாவை யார் நிர்வகிக்கவேண்டும் என்ற…

Read More

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து வௌியேறிய அர்ஜுன!

(UTV | கொழும்பு) – இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளார். .BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரைபகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்ததையடுத்து பொலிஸார் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மேச்சல்தரை பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக புதிய சோதனைச்…

Read More

“காஸாவிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு”

(UTV | கொழும்பு) – காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். “இதற்குத் தேவையான…

Read More

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரை படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு நீதிமன்றம் இன்று(01) அறிவித்துள்ளது. ஷாப்டரின் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று(01.11.2023) தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டார். மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள்…

Read More

நாடாளுமன்றில் ஒழுக்க கோவையை மீறினால் உறுப்புரிமை நீக்கும் சட்டம்- நீதியமைச்சர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கக்கோவை தயாரிக்கப்படும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச்செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:…

Read More

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

(UTV | கொழும்பு) – “உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும். இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் நடைபெற வேண்டும். தேர்தலைப் பிற்போட்டு அதில் அரசியல் நடத்த எவருக்கும் இடமளிக்கமாட்டோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்பார்த்துக் காத்துக்…

Read More

இஸ்ரேல்- பலஸ்தீன் போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் விலை 90.44 டொலர்களாக காணப்படுகின்றது. இவ்விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தாக்கத்தை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

“நாம் 200” நிகழ்வு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் – ஜீவன் தொண்டமான் அழைப்பு.

(UTV | கொழும்பு) – “நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்….

Read More

மின்சார வாகன இறக்குமதி குறித்து வௌியான அறிக்கை!

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதில், மோசடிகள் இடம்பெற்றிருந்தால் விசாரணை நடத்துவதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் எனவும் குறுகிய அரசியல் நோக்கங்களினால் இந்த நடவடிக்கையை…

Read More