புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து!
(UTV | கொழும்பு) – அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. விரைவில் இந்த பதவி நியமனம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். அடுத்த பொலிஸ் மா அதிபராக முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும்…