ஜோன் அமரதுங்கவிற்கு அகில இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம்!

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க, எமது சகோதர ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அச்சுறுத்திய சம்பவத்துக்கு அகில இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம் வௌியிட்டுள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த சமமேளனம் இதனை குறிப்பிட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தகாத வார்த்தைகளால் தூற்றி தாக்க முற்பட்ட நிலையில் அவர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவத்தை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/john.jpg”]

Read More

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை வெளிநாட்டு சேவையில் 2016 (2017) தரம் III க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 2017 ஜூன் மாதம் 18, 24 மற்றும் 25ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டிப்பரீட்சைக்கு தோற்றும் 3789 பரீட்சார்த்திகளுக்காக 25 மத்திய நிலையங்களில் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு என் என் ஜே புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்த பரீட்சைக்காக 2017 ஜுன்…

Read More

தகுந்த நேரத்தில். தர வேண்டிய விதத்தில் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது இலங்கை

(UDHAYAM, COLOMBO) – சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய குழு B இற்கான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 50 ஓவர்களில் 322 ஓட்டங்களை நிர்ணயம்செய்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 48.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. ஓட்ட விபரங்கள் இதோ: [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/afafee.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/dsfadfsf-1.jpg”]

Read More

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க?

(UDHAYAM, COLOMBO) – செம்பியன் கிண்ண தொடரில் இந்தியாவிற்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள போட்டியில் அனேகமாக இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்படலாம் என கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையால் அணித் தலைவராக இருந்த உபுல் தரங்கவிற்கு இரண்டு போட்டிகள் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் உபாதைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலே மெத்தியூஸ் இந்தியாவுடன் இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடுவது உறுதியற்று காணப்படுவதாக…

Read More

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஊடக அறிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஊடக அறிக்கை.   [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/RTI_01.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/RTI_2.png”]   தொடர்புகளுக்கு – தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு , விலாசம் : 2-203-204 ,  BMICH கொழும்பு 07 தொலைபேசி இலக்கம் : 011 2691625

Read More

பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது. இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கான ஆலோசனை சேவையின் உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்த்துள்ளது. இதேவேளை, அனர்த்தங்களின்போது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்க அவசர சேவைப் பிரிவொன்று நடைமுறைப்படுத்தபடுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

இந்திய கப்பல் வெள்ள நிவாரண பொருட்களுடன் இலங்கை வந்தடைந்தது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு மற்றும் வைத்திய உபகரணங்களுடன் குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த நிவாரண பொருட்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்தியா…

Read More

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,இந்திய – தமிழக பிரீமியர் லீக் தொடரின் திருவள்ளுவர் வீரன்ஸ் அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜுலை மாதம் இந்த தொடர் இடம்பெறவுள்ளது. திருவள்ளுவர் வீரன்ஸ் கழகத்தில் விளையாடும் போட்டியாளர்களுக்கு சிறந்த அலோசனைகள் வழங்க வேண்டி இருந்ததாக, அதன் உரிமையாளரும், இந்திய கிரிக்கட் அணித் தேர்வாளருமான வீ.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதன்படியே முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முரளிதரனின் சிறந்த அனுபவமும், நிபுணத்துவமும் இந்த கழகத்தின்…

Read More

எதிர்ப்பாராத மாற்றம் காரணமாக இலங்கை அணி எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்!

(UDHAYAM, COLOMBO) – ஐசிசி தரப்படுத்தலில் 7 வது இடத்திற்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை அணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியால் இலங்கைக்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலக கிண்ணப்போட்டியிற்கு நேரடியாக தகுதிபெற வேண்டுமாயின் இலங்கை அணி இந்த 7 வது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதாவது , இவ்வருடத்தின் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை ஐசிசி…

Read More

பாகிஸ்தான் 8 மாணவர்கள் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானை சேர்ந்த 8 மாணவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து ஷாசியா ஷாகித் என்பவரின் தலைமையில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இன்று முதல் 28ம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பர். இந்த மாணவர்கள் இலங்கையிலுள்ள பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் டொக்டர் ஷவ்றாஸ் அஹமத்கான் சிப்றாவையும் சந்தித்தனர். இந்த நிகழ்வு இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நிலையத்தில் இடம்பெற்றது. இவர்கள் கண்டி…

Read More