இரணைத்தீவு மக்கள் வறுமையில் போராட அவர்களின் வளங்களோ திருடப்படுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார

(UDHAYAM, COLOMBO) – இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்று கோரி மே மாதம் முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் இருக்க  தீவில் உள்ள மக்களின் வாழ்வாதார வளங்கள் திருடப்பட்டு வருகிறது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கவனயீர்ப்பில் ஈடுப்பட்டு வரும் மக்களை சென்று சந்தித்து கருத்து தெரிவித்த…

Read More

ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனே வௌியேறவும் – தே.க.ஆ.அ

(UDHAYAM, COLOMBO) – அதிக மழை காரணமாக ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வௌியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை , இரத்தினபுரி , கேகாலை , மாத்தறை , காலி , ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ள காரணத்தால் குறித்த பிரதேசங்களுக்கு வௌியிடப்பட்டமண்சரிவு அபாயஎச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அந்த அமைப்பின் பணிப்பாளர் ஜெனரால் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Read More

நான்கு கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு – மக்கள் அவதானம்

(UDHAYAM, COLOMBO) – அதிக மழைக்காரணமாக களனி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வளங்கள் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காலை 5.30 மணியில் இருந்து எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரை நாட்டின் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பருவபெயர்ச்சி காலநிலை நாட்டின் ஊடாக…

Read More

த.தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

(UDHAYAM, COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்துடனும் மக்களுடனும் இணைந்து செயற்படுகிறது. ஆனால் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து தம்மை பலப்படுத்தி வருகிறதே தவிர, மக்கள் நலன் குறித்து அக்கறைக் கொள்ளவில்லை. சர்வதேசமும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக…

Read More

தலசீமியாவினால் 360 மில்லியன் மக்கள் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தலசீமியா நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியே அந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதென்று வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர் பேராசிரியர் அனுஜ் பேமவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர் பேராசிரியர் அனுஜ் பேமவர்தன இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் சிறப்பான பணியை ஊடகங்கள் மேற்கொள்ளமுடியும் என்றும்…

Read More

கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிகம மக்கள் ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – வெலிகம கப்பரதொட பிரதேசத்தில் செயற்பட்டு வரும் கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Read More