வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு

(UDHAYAM, COLOMBO) – வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு தேவையான குடிநீர் விநியோகத்துக்காக இந்திய அரசாங்கத்தினால் தண்ணீர் பௌசர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்தினால் 08 தண்ணீர் பௌசர்கள் குறித்த தண்ணீர் பௌசர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டன. 16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சி காரணமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக…

Read More

இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேர் இன்று ஒப்படைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேரை இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் ஊடக பேச்சாளர் லுதினல் கமான்டர் சமிந்த வலாகுலுகே இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பத்தாம் திகதியின் பின்னர் கைதுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களே விடுவிக்கப்படவுள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கையின் வடக்கு கடற் பரப்பு எல்லைக்கு இரண்டு இந்திய கடற்படை படகுகள் வருகைதரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி…

Read More

இந்திய கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு இல்லை – கடற்படைத் தளபதி

(UDHAYAM, COLOMBO) – இந்திய கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு இல்லை என கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். கச்சத்தீவில் நேற்று இடம்பெற்ற புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர், இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய கடற்றொழிலாளர்கள் இந்த முறை கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள வில்லை. இந்திய- இலங்கை கடல்…

Read More