ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்றோனியோ குற்றீஸ்க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

Read More

சுஷ்மா , ரவி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சந்தித்துள்ளார். தமது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதையடுத்து, வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டதாக…

Read More

ஜனாதிபதி, அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல்லை ( Malcolm Turnbull) சந்தித்துள்ளார். இதன்போது அவர்களுக்கிடையில் இருநாட்டு இராஜதந்திர உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று கென்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு ஜனாதிபதி விஜயம் செய்தார். இதன்போது ஜனாதிபதியை கென்பராவின் சட்டமா அதிபர் கோல்டன் ரம்சே வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி அவுஸ்திரேலிய…

Read More

ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர், மங்கள சரவீரவை சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – மத்திய மற்றும் தெற்காசிய விவகாரம் தொடர்பான ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் வில்லியம் இ.டொட் நிதி அமைச்சர் மங்கள சரவீரவை சந்தித்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதுடன், புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இலங்கையில் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு உதவும் நோக்கிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

Read More

பிரதமர் – சீன ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில்     அந்நாட்டின் ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது திருமதி மைத்திரி விக்கிரமசிங்க மற்றும்   திருமதி. ஸி ஜின்பிங்கை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ் வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – அட்டன் கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ்   வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சற்தித்துள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. தமது கோரிகள் சிலவற்றை  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நிறைவேற்றி வைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நிலவும் மேலும் சில குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Read More

பிரதமருக்கும் அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தின் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, CANBERRA) – அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநிலத்தின் ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்குயிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள். இதேவேளை  டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளயை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பொருளாதாரம்….

Read More