புதிய வரிச்சலுகை திட்டம் – நிதி அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – புதிய முதலீடுகள் தொடர்பில் புதிய வரிச்சலுகை திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி முகாமைத்துவ அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இது விடயம் தொடர்பான வர்த்தமான அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் சிறிய. நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சியாளர்களின் நன்மை கருதி இந்த வரிச்சலுகை…

Read More

மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்க இந்தியாவின் உதவி – கல்வி இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக கல்வி அபிவிருத்தி , வீடமைப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஹற்றன் டிக்கோயாவில் இடம்பெறும் ஆதார வைத்தியசாலை புதிய கட்டிடதொகுதி திறப்பு வைபவ நிகழ்வின்போது இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி…

Read More

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதப்பட்ட  இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு அதிகாரி காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்….

Read More

எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது – அமைச்சர் கபீர் ஹாஷிம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகவும்  அமைச்சர்  மேலும்  தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் பின்பற்றப்படுமென்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

Read More

தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

Read More

2 வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் மீது முழுமையான நம்பிக்கைகொண்டு அரசாங்கம் ஜக்கிய நாடுகள் சபையில் கோருவது போல இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் இன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன்…

Read More

2020ல் தொற்றாநோயை 5 சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டம் – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

(UDHAYAM, COLOMBO) – தொற்றா நோயை 2020ம் ஆண்டளவில் ஐந்து சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டமாகும்; என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தில் பயாகல ராஜித சேனாரட்ன மைதானம் மற்றும் மக்கொண விளையாட்டு மைதானத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையங்களை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று முன்தினம்கலந்துகொண்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் , தொற்றா நோயை தடுக்கும் நோக்கில் தேகப் பயிற்சி மத்திய நிலையங்களை…

Read More

கிழக்கில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வெற்றியே வடக்கிலும், தெற்கிலும் அவர்களை தலை நிமிர்ந்து வாழவைக்கும் – மட்டுவில் அமைச்சர் ரிஷாட்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எமக்குக் கிடைக்கும் வெற்றிதான் வடக்கில் மண்ணுக்காக போராடும் முஸ்லிம் மக்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைவதுடன் தென்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை விடயங்களும் வெற்றிபெறும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு அண்மையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…

Read More