பாதிக்கப்பட்ட பிரதேச கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டம் –ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல் தொடர்பாக இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். கழிவு முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது…

Read More

பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டகளுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, யட்டகம்பிற்றிய, நாஹகதொல பிரதேசங்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனகண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று முற்பகல் மேற்கொண்ட இந்த விஜயத்;தின்போது சேதமடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. பாஹியங்கல மலை மண்சரிவுக்குட்பட்டு நாஹகதொல கங்கையில்…

Read More

ஹர்ஷ டி சில்வா இன்று முறி மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அழைக்கப்பட்டுள்ளளார். இதற்கமைய அவர் இன்று காலை பத்து மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இதற்கு முன்னதாக ஹர்ஷ டி சில்வா கடந்த 25 ஆம் திகதி வாக்கு மூலம் பெற்றுக்கொடுப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆணைக் குழு கூடுகின்ற நிலையில், பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தவிர மத்திய…

Read More

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை நினைவு கூறும் அனைவரும், மீண்டும் அதுபோன்ற துயரங்கள் ஏற்படாத வகையில் செயற்படுவது, அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

அரசாங்கத்தின் முறையான அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பு தேவை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அரசியல்வாதிகள் அபிவிருத்திக்கு பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை…

Read More

தகுதியானவர்களுக்கு தகுதியான பதவி வழங்குவதே தமது கொள்கை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – தகுதியானவர்களுக்கு தகுதியான பதவி வழங்குவதே தமது கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவெலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மஹிந்த அமரவீர தமது கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வு இன்று மகாவெலி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்றது. அதன்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். நாடு குறித்து சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தகுதியானவர்களுக்கு தகுதியான பதவிகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Read More

சர்வ மத தலைவர்கள் ஒரே மேடைக்கு வரவேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மத அடிப்படையிலான முரண்பாடுகளை தடுப்பதற்கு சர்வசமய தலைவர்கள் ஒரே மேடையில் ஏற வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இத்தகைய நெருக்கடிகளை தடுப்பதற்கு சட்டமும், ஒழுங்கும் முறையாக அமுலாக்கப்படும். நெருக்கடிகளுக்கு தூபமிடும் தரப்புக்கள் மத்தியில் விடயங்களை விளக்கிக் கூற பொதுவான வேலைத்திட்டம் அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார். சர்வ மத ஆலோசனை குழுவின் அங்கத்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் சண்டைகளை தூண்டி, தேசிய ரீதியில் பிரச்சினையை ஏற்படுத்தும்…

Read More

ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரியில் விசேட பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அதன் எஞ்சிய பணிகள் தொடர்பான விடயங்யளைக் கணடறிவதற்கான விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன தலைமையில் இன்று காலை இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read More

விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரின் விமானிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு விமானம் ஊடாக உணவு மற்றும் வேறு அதியவசிய பொருட்களை கொண்டு செல்லும் போது விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரை செலுத்திய குறித்த விமானக் குழுவின் தலைவர் பானுக தெல்கொடவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி ஊடாக தனது பாராட்டை தெரிவித்துள்ளார். நிவாரணப் பொருட்களுடன் விமானப் படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் விபத்திற்கு உள்ளானது. இதன்போது குறித்த ஹெலிகொப்டரில் 11 பேர்…

Read More

ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்றார்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி, அமைச்சர் வஜிர அபேயவர்த்ன, அவரது செயலாளர் பி.பீ.அபேயகோன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு உடனடி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தேவையான நிதியை, நிதியமைச்சில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்….

Read More