பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

(UTV | கொழும்பு) – பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கையின் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இணையதளத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தையும், கௌதம புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை இட்ட முகநூல் கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்ற விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல் இலங்கசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். இணையதளத்தை பயன்படுத்தி புஸ் புத்தா (Puss Buddha)…

Read More

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

(UTV | கொழும்பு) – இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய வட் வரி தொகையானது பெரும் அதிகரிப்பை கொண்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9941 ரூபாவை வட் வரியாக செலுத்தி வருகின்றது. 2024ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20467 ரூபாவை வட் வரி செலுத்த…

Read More

பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாகிய இலங்கை!

(UTV | கொழும்பு) – இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன. மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க, மேற்படி…

Read More

பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் புதிய சீர்திருத்தங்கள் – சுரேன் ராகவன்.

(UTV | கொழும்பு) – இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே உயர்…

Read More

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் நபர் ஒருவரை தாக்கியதன் மூலம் அவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என தீர்மானித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உட்பட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும்…

Read More

கல்வி முறையில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள்!

(UTV | கொழும்பு) – அடுத்த ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்குவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய…

Read More

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”

(UTV | கொழும்பு) – மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக அவருக்கான நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பின்வரும் விடயங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு…

Read More

(UTV | கொழும்பு) –    நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று முன்தினம் (04) பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் இன்று (06) நாடாளுமன்றில் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, “நீதியமைச்சு தொடர்பான விவாத தினத்தன்று (04) நான் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், கௌரவ நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…

Read More

போர் நிறுத்தம் இன்றுடன் முடிவா – இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகித்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன. இதன் பயனாக இலங்கை நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த…

Read More

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் IMF விசேட அறிக்கை!

(UTV | கொழும்பு) – இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, இரண்டாவது தவணையை வெளியிடுவதற்கு வழி வகுக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More