இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி உறுதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்க்பிங்க்  உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. சிறிய தீவான இலங்கை, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை சேவையில் முக்கியத்துவமிக்கது என சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சீனாவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான இந்த வட்டமேசை மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட…

Read More

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோய் வேகமாக பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் டெங்கு ஒழிப்பு செயலணியை உடனடியாக ஒன்றுகூட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு செயலணி ஜனாதிபதி தலைமையில் இன்று ஒன்றுகூடவுள்ளது. 2017ம் ஆண்டு இதுவரையில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44,623 வரை அதிகரித்துள்ளதுடன், 115 மரணங்களும் இடம்பெற்றுள்ளன. 2014ம் ஆண்டு 47,246 டெங்கு நோயாளர்களும் 97 மரணங்களும்…

Read More

சாக்குடியரசின் மாதிரிக்கட்டமைப்பு ஜனாதிபதி தலைமையில் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை கஹபொல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சாக்ய குடியரசின் மாதிரி கட்டமைப்பிற்குரிய முதல் பகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார். புத்தபெருமான் அவதரித்த லும்பினி உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை உள்ளடக்கும் வகையில் சாக்ய குடியரசின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. ஐநா சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பமானது. தொன் சைமன் விஜயவிக்ரம சமரக்கோன் என்ற கொடையாளி வழங்கி 78 ஏக்கர் காணியில் கட்டமைப்பு 50 கோடி ரூபா…

Read More

நேபாள ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச வெசாக் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி நாளை இலங்கை வருகின்றார். ஐநா வெசாக் தின வைபத்தின் நிறைவு நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் மஹாமடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நேபாள் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். இன்று சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பமாகின்றது. இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார்.

Read More

இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்றிரவு  விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன்,…

Read More

கழிவு முகாமைத்துவ தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சுக்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கழிவு முகாமைத்துவத்தின் போது உள்ளுராட்சி மன்றங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் உட்பட பல விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது…

Read More

நாட்டுக்கு பாதகமான எந்தவொரு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்படமாட்டாது – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – நாட்டுக்கு எந்தளவு பொருளாதார நலன்களைக் கொண்டுவந்தாலும் நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளிலும் எந்தவொரு நாட்டுடனும் கையொப்பம் இடப்படமாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் மின்னுற்பத்தியின்போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி பொருளாதாரத்தைப்…

Read More

நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியே நோக்கம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது நாட்டை பிளவு படுத்துவதற்காக இன்றி நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியை மேற்கொள்வதற்காகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி –  கெட்டம்பே மைதானத்தில் நேற்று இடம் பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Read More

கழிவு முகாமைத்துவம்:வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பான விபரங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UDHAYAM, COLOMBO) – கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பயிற்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த 5 வருட காலப்பகுதியில் வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பான விபரங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். மீதொட்டமுல்ல குப்பை…

Read More

பிரான்சின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு:இருவருக்கு மத்தியில் கடும் போட்டி

  (UDHAYAM, COLOMBO) – பிரான்சின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று ஆரம்பமானது. பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான முதல் சுற்று வாக்களிப்புகளின் படி, இம்மனுவேல் மெக்ரோன் மற்றும் மெரின் லீ பென் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்புகளின் படி, இம்மனுவேல் மெக்ரோன் 23.7 வீத ஆதர பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், மெரின் லீ பென் 21.7 வீத ஆதரவினை பெற்றுள்ளார். இந்த முறை 12 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள…

Read More