சூர்யாவின் சம்பளத்தை அதிகரிக்க கூறிய விஜய்!

(UDHAYAM, COLOMBO) – தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கும் மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்துவிட்டனர். இந்நிலையில் விரைவில் மூன்றாவது லுக் வெளியாகவுள்ள  நிலையில், விஜய்க்கு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளதாம். அவரின் நடிப்பு விஜயை மிகவும் கவர்ந்ததால், அவரின் சம்பளத்தை கொஞ்சம் ஏற்றுமாறு விஜய் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கிராமத்து கதாபாத்திரத்தில் வரும் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே,சூர்யா நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Read More

காலம் கடந்த சிகிச்சையே டெங்கு உயிரிழப்பு அதிகரிக்க காரணம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் காலங்கடந்த சிகிச்சையே ஆகும். இதற்கான வைரஸ் உடலுக்குள் உட்சென்று பல நாட்கள் சென்ற பின்னர் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமையினாலேயே டெங்கு நோயின் காரணமாக அதிகளவில் உயிரிழப்பு இடம்பெறுகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். சர்வதேச சனத்தொகை நாளினை முன்னிட்டு சுகாதார கல்வி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். டெங்கு…

Read More

வடக்கு கிழக்கில் முயற்சியான்மைகளை அதிகரிக்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுதொழில் முயற்சியான்மைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் ஆயிரத்து 785 சிறுமுயற்சியான்மைகள் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More