ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்ரீ கொத்தவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker…

Read More

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மகிந்தவிற்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் விடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி மன்ற எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹெலப்ரிய நந்தராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் இன்று ஆராயப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுவில் அடங்கிய விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்து கோரப்பட வேண்டும் என்றும் அதன்…

Read More

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை இலங்கைக்கு அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார். தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டரை நாட்களாக மேற்கொண்ட நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் அவர் இதன்போது அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், இலங்கை பொதுமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும்…

Read More

சவூதி சென்ற இலங்கை பெண் தொடர்பில் வந்த அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவ பிரதேசத்தை சேர்ந்த நிலுபமா சங்ஜிவனி என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் வரை தொலைப்பேசியினூடாக கதைத்து வந்தார் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் , கடந்த ஏப்ரல் 25ம் திகதி நிலுபமா சவுதியில் மருத்துவமனையொன்றில் உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை தொடர்ந்து…

Read More

ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பேர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள, இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் அலக்ஷாண்டர் கர்சாவா இதனைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பல பிராந்தியங்களை உள்ளடக்கியதாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி விடயங்களை காட்சிப் படுத்த முடியும் என்று ரஷ்யத்தூதுவர் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக இலங்கைக்கு பல புதிய வர்த்தக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Read More

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொருளாதார அரசியல் நிர்வாக துறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக எதிர்வரும் மே மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான தீர்மானங்களை எடுப்பார் என்று ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டி கட்டம்பே மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எழுத்து…

Read More