சவூதி சென்ற இலங்கை பெண் தொடர்பில் வந்த அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹவ பிரதேசத்தை சேர்ந்த நிலுபமா சங்ஜிவனி என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

அவர் கடந்த ஏப்ரல் மாதம் வரை தொலைப்பேசியினூடாக கதைத்து வந்தார் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் , கடந்த ஏப்ரல் 25ம் திகதி நிலுபமா சவுதியில் மருத்துவமனையொன்றில் உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியை தொடர்ந்து , மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில் , விசாரணை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களையும் குடும்ப உறுப்பினர்களுக்கு அறியப்படுத்த வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

32 வயதுடைய நிலுபமா சஞ்சிவனி ஒரு குழந்தையின் தாயாவார்.

தற்போதைய நிலையில், அவரின் குழந்தையை அவரின் பெற்றோர் பராமரித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நிலுபமாவின் கணவர் அவர் வௌிநாடு சென்ற சில தினங்களில் பின்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாகவும் , நிலுபமாவுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தால் வழங்கப்பட்ட 3 இலட்சம் ரூபா பணத்தை அவர் எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *