ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால் இடம்பெறுகின்றன

(UTV|COLOMBO)-உலகில் 90 வீதமான மக்கள் அசுத்த காற்றையே சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் வருடாந்தம் 7 மில்லியன் வரையிலான உயிரிழப்புக்கள் நேர்வதாக ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. அசுத்தக்காற்றை சுவாசிக்கும் நிலைமை அபிவிருத்தியடையாத நாடுகளில் மிகவும் மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியதர வருமானமுள்ள நாடுகள் குறிப்பாக ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள் அசுத்தக்காற்றை சுவாசிப்பதனாலேயே இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom குறிப்பிட்டுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…

Read More

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் வென்காய் சாங் இன்று இலங்கை வரவுள்ளார்.   இன்று முதல் 25ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பதார்.   இதன்போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பல்வேறு உயர்மட்ட அரச திணைக்க பிரதானிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மையப்படுத்தி இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.   எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…

Read More

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இன்று நாடு திரும்பினர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.

Read More

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. போட்டிகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. மஞ்சுள குமார தலைமையிலான இலங்கை மெய்வல்லுநர் அணியினர் இதில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு சபையின் கூட்டம் புவனேஷ்நகரில் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

Read More

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் தேசிய பளு தூக்கும் வீரரான ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். உலக கனிஷ்ட பகிரங்க பளு தூக்கும் சுற்றுத்தொடர் சமீபத்தில் மொனக்கோவில் நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் ரன்சிலு கலந்து கொண்டார். இவர் 120 கிலோ பிரிவில் 315 கிலோ கிராம் எடை தூக்கி சாதனை படைத்ததாக இலங்கை பளு தூக்கும் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Read More

பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டிற்கு தயாராகும் இலங்கை

(UDHAYAM, COLOMBO) – 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்காக இலங்கை அணியை தயார் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 25 விளையாட்டு சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் இதுதொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் தயசிறி ஜயசேகரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் அனைத்து தெரிவுகளையும் மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத்துறை பிரதிநிதிகள் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர். வெளிநாட்ட…

Read More

பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டிற்கு தயாராகும் இலங்கை

(UDHAYAM, COLOMBO) – 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்காக இலங்கை அணியை தயார் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 25 விளையாட்டு சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் இதுதொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் தயசிறி ஜயசேகரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் அனைத்து தெரிவுகளையும் மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத்துறை பிரதிநிதிகள் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர். வெளிநாட்ட…

Read More

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வர் எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த வீரர்கள் தியகமையில் இலங்கை விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளின்போது தெரிவுசெய்யப்பட்டனர். ஆசிய சாம்பியன்ஷிப் கழகத்தினால் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு…

Read More

ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை மெய்வல்லுனர்கள் 12 பேர்

(UDHAYAM, COLOMBO) – சீனாவில் அடுத்த மாதம் ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கையில் இருந்து 12 மெய்வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஐந்து பெண் வீராங்கனைகளும், 7 வீரர்களும் உள்ளடங்குகின்றனர். சீனாவின் ஜியாக்சிங்கில் 24ம் திகதியும், ஜின்ஹுவாவில் 27ம் திகதியும், தாய்பேயில் 30ம் திகதியும் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன. ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸிப் போட்டிகளிலும் இலங்கை பங்குகொள்வதால், இந்த போட்டித்தொடர் இலங்கைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

Read More