தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரமும் கொடி தினமும் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு
(UDHAYAM, COLOMBO) – தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் ”அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வீர்” என்ற தொனிப்பொருளில் தேசிய ரீதியில்…