அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் சதுர்தா வருஷ பூர்த்தி விழா

(UDHAYAM, COLOMBO) – கொட்டகலை அகில இலங்கை இந்து குருமார் சங்கம் ஒழுங்கு செய்துள்ள சதுர்தா வருஷ பூர்த்தி விழா நடைபெற்றது.

அகில இலங்கை இந்து குருமார் சங்கத்த்தின் செயலாளர் சிவஸ்ரீ ச.ஸ்கந்தராஜாவின் ஏற்பாட்டில் கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலய கலாசார மண்டத்தில் நேற்று காலை இடம்பெற்றது.

இந்த சதுர்மத வருஷ பூர்த்தி விழாவில் விநாயகர் வழிபாடு, குரு வந்தனம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா வேத பாடசாலை மாணவர்களின் காயத்திரி ஜெயம், அறநெறி பாடசாலை மாணவர்களின், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அத்துடன் வேதகம பாடசாலை குரு குல அதிபர், ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறி மாணவர்களுக்கான பரிசளிப்பு, ஆலய பரிபாலசபையினர் மற்றும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டவர்களுக்கான கௌரவிப்பு, நினைவு சின்னம் வழங்கல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வுக்கு வேதசிவகாம பயிற்சி பாடசாலையின் சகார சக்கரவர்த்தி ஈசான சிவாச்சாரியார், சிவஸ்ரீ காகு சச்சிதானந்த குருக்கள்,

சிவஸ்ரீ விஸ்வநாத குருக்கள், பத்ம வினோஜன் குருக்கள் என பல குருக்கள் உட்பட அறநெறி ஆசிரியர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *