இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலக பிரவிற்கும், பதுளை மாவட்டத்தின் கந்தமுல்ல பிரதேச செயலக பிரிவிற்கும் இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர இதனைக் கூறியுள்ளார். இதன்காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பாட இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்…